#Breaking:சற்று முன்…தேசிய பங்குச்சந்தை முறைகேடு – ஆனந்த் சுப்பிரமணியம் கைது?..!
பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் செயலாக்க அதிகாரிஆனந்த் சுப்பிரமணியயத்தை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல்.
கடந்த 2013-ம் ஆண்டு என்.எஸ்.இ.யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில்,என்.எஸ்.இ.யில் நடக்கும் முறைகேடுகள் (கோ லோகேஷன் முறைகேடு) பற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால்,எந்த முறைகேடும் நடக்கவில்லை என என்.எஸ்.இ. விளக்கம் கொடுத்தது.இதனால், அழுத்தம் அதிகரிக்கவே என்.எஸ்.இ.யின் தொழில்நுட்ப குழு, கார்ப்பரேட் கவர்னன்ஸ் என அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இதற்கிடையில்,ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை விதிகளுக்கு மீறி முக்கிய பொறுப்பில் நியமித்தது மட்டுமல்லாமல்,இமயமலையில் உள்ள முகம் தெரியாத ஒரு யோகியின் வழிகாட்டுதலில் 20 ஆண்டுகளுக்கு மாறாக சித்ரா செயல்பட்டிருக்கிறார் என செபி குற்றம் சாட்டியிருந்தது.
இதனையடுத்து,சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்நிலையில்,தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்னாள் குழு இயக்க அதிகாரியும் ஆலோசகருமான ஆனந்த் சுப்ரமணியம், என்எஸ்இ வழக்கு தொடர்பாக சென்னையில் இருந்து நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என ANI செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Anand Subramaniam, former Group Operating Officer and advisor to former MD of National Stock Exchange Chitra Ramkrishna, arrested by CBI late last night from Chennai in connection with the NSE case: Sources
— ANI (@ANI) February 25, 2022