பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகள் பறிமுதல் – பாஜக நிர்வாகி, இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது!

Default Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகளை கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய 7 உலோக சுவாமி சிலைகளை, சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரு நடராஜர், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகள் பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி செயலாளர் அலெக்சாண்டர், இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்த 7 சுவாமி சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன் ஆகியோரை சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடக்கூடிய பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எனக்கூறி அலெக்சாண்டர் மூலம் ரூ.5 கோடிக்கு சிலைகளை விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.

அலெக்சாண்டரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 காவலர்கள் உள்பட 3 பேர் சிக்கினர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி ராமநாதபுரத்தில் மறைத்து வைத்திருந்த 7  சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்