#BREAKING: உக்ரைன் தலைநகரில் நுழைந்த ரஷ்யப்படைகள்..!
பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் இன்று காலை முதல் தாக்கல் நடத்தி வருகிறது. ஆயுதக்கிடங்கு, ராணுவத் தளவாட நிலையம், இராணுவ பயிற்சி மையங்கள், விமான தளங்கள் போன்றவற்றை ரஷ்யா அழிக்க தொடங்கியுள்ளது.
இந்தத்தாக்குதலில் 40 இராணுவ வீரர்களும், 10 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்நிலையில், பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர்.