#BREAKING: ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி – ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு!
உக்ரைன் – ரஷ்யா போரால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வரும் உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.108 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,827க்கு விற்பனையானது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.1.90 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60க்கு விற்பனை செய்யப்பட்டது.
உக்ரைன் மீது பலமணி நேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, நேரடியாக ராணுவ படைகள் மூலம் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் பங்குச்சந்தைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணமதிப்பு குறைவு, பிட் காயின் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக வரலாற்று சரிவை கண்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. ஆனால், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது ரஷ்யா.
ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியால் ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.115 உயர்ந்து, ரூ.4,874க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்து, ரூ.38,992க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ரூ.71.40கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போரால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.