#BREAKING: உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல்! ரஷ்ய நாட்டின் பணமதிப்பு 9% குறைவு!

Default Image

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய பணமதிப்பு குறைவு.

உக்ரைன் நாட்டின் மீது பல மணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியுள்ளது. அதாவது, ஏராளமான ரஷ்ய படையினர் வெள்ளை நிற பேராசூட்டுகள் மூலம், உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது. தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு மக்கள் படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

உக்ரைனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதையில் பொதுமக்கள் தஞ்சமைடைந்துள்ளனர். ரஷ்ய படையினர் உக்ரைன் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

லுஹான்ஸ்க்கில் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 103 டாலராக உயர்ந்துள்ளது.

இதனிடையே, ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ராணுவ தளங்களை மட்டுமே தாக்குவதாக ரஷ்யா கூறிய நிலையில், பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு என உக்ரைன் குற்றசாட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்