#Breaking:அதிர்ச்சி…நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலி – உக்ரைன் அரசு!
ரஷ்யாவின் தாக்குதலால் தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில்,உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை ரஷ்யா தாக்க தொடங்கியது.மேலும்,ஒடோசா , கார்கிவ், மைக்கோல் ,மாரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது.
இதனைத் தொடர்ந்து,விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன் ரஷ்யாவின் ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில்,அதிநவீன கருவிகள் கொண்டு உக்ரைன் ராணுவ தளவாடங்கள் உள்ள பகுதிகள் மட்டுமே தாக்கப்படுவதாகவும்,உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் ரஷ்யா ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,ரஷ்யாவின் தாக்குதலால் தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 1800118797 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்காக,டெல்லியில் கட்டுப்பட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.