#BREAKING: உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி – ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு!
உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலியால் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லையில் 2 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்து போரை தொடுத்துள்ளது. உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனால் இந்திய பங்குச்சந்தை உள்ளிய தேசிய பங்குசந்தைகளில் கடும் சரிவை சந்தித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரால் பெரும் பொருளாதாரம் பாதிப்பு உண்டாகும் என உலக நாடுகள் அச்சத்தின் உள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் உலக அளவில் பொருளாதார சுமையை அதிகரிக்கும் எனவும் அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில், உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலியால் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.108 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,827க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.90 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60க்கு விற்பனையாகிறது. உக்ரைன் நாட்டை ரஷ்யா படைகள் தாக்கி வருவதால் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,002.97 புள்ளிகள் சரிந்து, 55,229.09 புள்ளிகளில் வணிகமாகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 586.25 புள்ளிகள் குறைந்து, 16,477 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி பொருளாதார சிக்கலை உருவாகியுள்ளது.