#BREAKING: ரஷ்யாவின் போரால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,002.97 புள்ளிகள் சரிந்து, 55,229.09 புள்ளிகளில் வணிகமாகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 586.25 புள்ளிகள் குறைந்து, 16,477 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனக்ஸை தாக்க தொடங்கியது ரஷ்யா. ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தை உள்ளிய தேசிய பங்குசந்தைகளில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போரால் பெரும் பொருளாதாரம் பாதிப்பு உண்டாகும் என உலக நாடுகள் அச்சத்தின் உள்ளது.கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் உலக அளவில் பொருளாதார சுமையை அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.