உ.பி-யில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம் இதோ..!

Default Image

மாலை 5 மணி நிலவரப்படி, உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 57.45% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும்,2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி,பிலியட், லக்கிம்பூர்கேரி, லக்னோ, உன்னோவ், ரேபரேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 57.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்