ரஷ்யா- உக்ரைன் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.8 உயர வாய்ப்பு..!

Default Image

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 வரை  உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ளது. உக்ரைனில் நிலவும் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அச்சச் சூழல் நிலவுகிறது. இந்தப் போர் மூன்றாம் உலகப் போராக மாறுமோ..? என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. ரஷ்யா உக்ரைனை தாக்க தயாராக உள்ளது.  கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால் உலகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, யுத்தம் ஏற்பட்டால் பின்வாங்கப் போவதில்லை எனவும் உக்ரைன் உறுதியாக உள்ளது.  ரஷ்யா-உக்ரைனில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் விற்பனை சரிந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ரஷ்யா உக்ரைனைத் தாக்கினால், அது இந்தியாவிலும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் சந்தையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு:

உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் நேற்று 2.03 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன் பிறகு விலை 97 டாலர்களை எட்டியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு இருக்கும்.  ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை100 வரை டாலர் செல்லலாம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் பட்சத்தில், அதன் முழு விளைவும் உள்நாட்டு சந்தையில் தான் இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 வரை  உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடந்து வரும் சட்டசபை தேர்தல் காரணமாக எரிபொருள் விலை உயராமல் உள்ளதாக கூறப்படுகிறது. உலக எண்ணெய் உற்பத்தியில் 10% ரஷ்யாவின் பங்கு. எனவே, போரை முன்னெடுத்துச் செல்வதால், ரஷ்யா மீதான உலகத் தடைகள் வலுப்பெற்றால் கச்சா எண்ணெய் கிடைப்பது குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை 100 நாட்களுக்கும் மேலாக மாறாமல் உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் பொருளாதார நடவடிக்கையை பாதிக்கும் என்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கும் தலைவலியாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்