முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் சில பிரிவுகள் சேர்ப்பு – காவல்துறை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தகவல்.
திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜெயக்குமார் மீது 66 (இ) தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை முயற்சி பிரிவான 307க்கான குற்றமே நடக்கவில்லை என ஜெயக்குமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என வாக்கு எண்ணிக்கை நாளன்று சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.