காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் இல்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள் – ராகுல்காந்தி
இந்துத்வாதிகள் காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் இல்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். எங்கெல்லாம் உண்மை இருக்கிறதோ அங்கெல்லாம் காந்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என ராகுல் காந்தி ட்வீட்.
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது செயல்களை போற்றும் வகையில் தங்களது இணையப்பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துத்வாதிகள் காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் இல்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். எங்கெல்லாம் உண்மை இருக்கிறதோ அங்கெல்லாம் காந்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என, #GandhiForever என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.
एक हिंदुत्ववादी ने गाँधी जी को गोली मारी थी।
सब हिंदुत्ववादियों को लगता है कि गाँधी जी नहीं रहे।जहाँ सत्य है, वहाँ आज भी बापू ज़िंदा हैं!#GandhiForever pic.twitter.com/nROySYZ6jU
— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2022