மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை..!
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, காலை 10 மணியளவில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிலையில், காந்தியின் உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளனர். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, காலை 10 மணியளவில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.