#BREAKING: தமிழகத்தில் குறையும் கொரோனா.. ஒரேநாளில் 24,418 பேருக்கு பாதிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,03,702 ஆக உயர்வு.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 26,533 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 24,418 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,03,702 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,885 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தமாக இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,57,846 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று, ஒரேநாளில் கொரோனாவுக்கு 46 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,506 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,40,979 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,08,350 ஆக உள்ளது.