பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது வழக்கு பதிவு..!
வினோஜ் பி.செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில் பொய்யான தகவலை பரப்பும் வகையிலும், மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது.
எனவே வினோஜ் பி.செல்வம் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். இந்த புகாரை தொடர்ந்து, பி.செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.