7.5 % ஒதுக்கீடு – மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது..!
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீடு கீழ் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது.
தமிழ்நாட்டில் நீட் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் மற்றும் 1,930 பி.டி.எஸ் உள்ளன. இந்த இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினா் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது.
இதற்கிடையில், இன்று மற்றும் நாளை அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீடு கீழ் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது.
வரும் 30-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்குக் கலந்தாய்வு தொடங்க உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.