நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அதிமுக இன்று ஆலோசனை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில்,  கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.