அரியலூர் மாணவி தற்கொலை – சென்னையில் பாஜகவினர் போராட்டம்..!
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மதமாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக புகார் அளித்தார். இந்நிலையில், மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.