நாகசாமி மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் – ஈபிஎஸ்

Default Image

தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞருமான நாகசாமி மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர். 35 ஆண்டு காலம் தொல்லியல் துறைக்கு பணியாற்றிய நாகசாமி  சென்னை பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத முதுகலை பட்டதாரியானவர், பின்னர் பூனா பல்கலைகழகத்தில் தொல்லியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். 1930 இல் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் பிறந்த நாகசாமி 1959-1963 வரை சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக தன் பணியைத் தொடங்கியிருக்கிறார்.

மத்திய அரசு, நாகசாமியின் பணிகளை பாராட்டி, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. தற்போது வயது முதிர்வு உடல்நலம் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாகசாமி மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்  என்று முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றியவரும், தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞருமான பத்மபூசன் நாகசாமி அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்