#Breaking:ஹேப்பி..சற்று குறைந்த கொரோனா…ஆனால்,கவனம்;22 லட்சத்தை கடந்த சிகிச்சை!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064  பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 439 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,95,43,328 ஆக உள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3,33,533 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 26,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,95,43,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 439 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,89,848 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,43,495 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,68,04,145 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21,87,205 ஆக இருந்த நிலையில்  22,49,335 ஆக அதிகரித்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,62,26,07,516  பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 27,56,364 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்