“இவரின் மறைவால் வேதனைஅடைகிறேன்” – பிரதமர் மோடி இரங்கல்!

Default Image

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்,அவரது மறைவு தனக்கு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி அவர்கள்,உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.இதனைத் தொடர்ந்து,அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள்.

Archaeologist Nagasami

இந்நிலையில்,தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள் எனவும்,அவரது மறைவால் தான் வேதனை அடைவதாகவும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் கூறியுள்ளதாவது:

“தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் திரு.ஆர்.நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள்.வரலாறு & தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது.அவரது மறைவால் வேதனை அடைகிறேன்.அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்.ஓம் சாந்தி”,என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாகசாமி அவர்கள் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராகவும்,அதன்பின்னர்,1963-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும்,மேலும்,1966-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தவர்.

கல்வெட்டு,கலை,இசை, நாட்டியம், தமிழ் வரலாறு உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல நூல்களையும் எழுதியவர். அதுமட்டுமல்லாமல்,நாகசாமி அவர்கள் தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர்.இதன்காரணமாக,நாகசாமியின் பணிகளை பாராட்டி,அவருக்கு மத்திய அரசு, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்