நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்..!
இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா அக்கடற்கரை சாலையில், உள்ள நேதாஜியின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப் பற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். சூரிய கதிர்களை போலவே சுபாஷ் சந்திரபோஸ் புகழும் நாடெங்கும் பரவி உள்ளது. சுபாஷ்சந்திரபோஸ் காட்டிய வழியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.
Paying homage to #NetajiSubhashChandraBose who is the symbol of patriotism for millions in India. His fame is omnipresent like the rays of sun across the nation and let’s march ahead with patriotism in the light shone by him. pic.twitter.com/86ouDdVoWt
— M.K.Stalin (@mkstalin) January 23, 2022