இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
???????????????? pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025