#Breaking:மகிழ்ச்சி…மீண்டும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு;டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 525 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,261 ஆக உள்ளது.
- இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3,37,704 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 3,33,53 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 4,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,92,37,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 525 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,89,409 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,59,168 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,65,60,650 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21,13,365 ஆக இருந்த நிலையில் 21,87,205 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,61,92,84,270 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 71,10,445 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.