“நேதாஜியின் 125-வது பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன்” – பிரதமர் மோடி புகழாரம்!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,”சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நாட்டு மக்கள் அனைவருக்கும் பராக்கிரம் திவாஸ் வாழ்த்துக்கள்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையான அஞ்சலிகள்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் ஜெயந்தி தினமான இன்று அவருக்கு தலைவணங்குகிறேன்.நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.
सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।
नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।
I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
இதற்கிடையில்,இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் பிரமாண்ட கிரானைட் சிலையை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்திருந்தார்.மேலும்,அவரது பிரமாண்ட சிலை கட்டி முடிக்கும் வரை, கிரானைட் சிலை அமைக்க அடையாளம் காணப்பட்ட இடத்தில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை இருக்கும் என்றும்,நேதாஜியின் பிறந்தநாளான இன்று ஹாலோகிராம் சிலையை திறந்து வைப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதன்படி,நேதாஜியின்125 வது பிறந்தநாளான இன்று அவரது ஹாலோகிராம் சிலை இந்தியா கேட் பகுதியில் பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.