இது நடந்தால் மத்திய – மாநில அரசுகளின் உறவு சிக்கலாகிவிடும் – டிடிவி தினகரன்

இந்திய ஆட்சிப்பணி விதிகளை மத்திய அரசு திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அமமுக பொதுசெயயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன், மத்திய – மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும். சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இத்தகைய குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கூட்டாட்சி நடைபெறும் இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்ததல்ல. இதையெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 22, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025