#Breaking:பொங்கல் பண்டிகை…”போக்குவரத்து கழகத்திற்கு ரூ.138 கோடி வருவாய்”- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!
பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் மூலம் சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னிட்டு ஏறத்தால 7 கோடி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் பயணம் செய்துள்ளனர் எனவும்,இதன்காரணமாக,தமிழக போக்குவரத்துத் துறைக்கு சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி,ஜனவரி 11,12,13 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.65.58 கோடியும்,ஜனவரி 15,16,17,18,19 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.72.49 கோடியும் என மொத்தமாக சுமார் 138.07 கோடி ரூபாய் போக்குவரத்துத் துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.