கேரளாவில் ஒரேநாளில் 41,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கேரளாவில் ஒரே நாளில் 41,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல்.

கேரளாவில் ஒரே நாளில் 41,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 33 பேர் உயிரிழப்பு நிலையில், இதுவரை 2.23 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரிசோதனை நேர்மறை விகிதமும் தொடர்ந்து உயர்ந்து 43.76 சதவீதத்தைத் எட்டியது.

ஒரேநாளில் பாதிப்புக்குள்ளான மாவட்ட வாரியான புள்ளிவிவரங்கள்: திருவனந்தபுரம்- 7,896, எர்ணாகுளம்-7,339, கோழிக்கோடு-4,143, திருச்சூர்- 3,667, கோட்டயம்-3,182, கொல்லம்-2,660, பாலக்காடு-2,345, மலப்புரம்-2,148, கண்ணூர், ஆலப்புழாத்தூழா-15, 29001 -1,708, இடுக்கி-1,354, வயநாடு- 850 மற்றும் காசர்கோடு-563 என மொத்தம் 41,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 95,218 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் தற்போது 3,55,438 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில், 3,47,666 பேர் வீடு/நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், 7,772 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. மாநிலத்தில் பலி எண்ணிக்கை 51,607 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 52,76,647 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கேரளாவில் 54 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை ஓமைக்ரான் பதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 761 ஆக உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்