இந்திய மன்னர் ஷாஜகான் பிறந்த தினம் இன்று..!

Default Image

பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இந்தியாவில் ஷாஜகான் தான் ஐந்தாவது முகலாய மன்னராக ஆட்சி புரிந்துள்ளார். ஷாஜகானின் இளமை வயதில் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்துள்ளார். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து ஷாஜகான் அரியணை ஏறியுள்ளார். முகலாய பேரரசர்களில் முக்கியமான அரசராக இவர் கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக வரலாறு குறிப்பிட்டுள்ளது.

ஷாஜகான் ஆட்சி காலத்தில் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்துள்ளது. ஷாஜகான் நிறைய நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளார். இதில் மிகப் பிரபலமாக இருப்பது ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால். இந்த தாஜ்மகால் உலக அளவில் புகழ்பெற்றது. இது அவருடைய மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்ட கல்லறை. ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. மேலும் புகழ்பெற்ற மயில் சிம்மாசனம் கூட அவருடைய காலத்துக்குரியது. இந்த மயில் சிம்மாசனம் தற்போது பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்