மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவு..!

Default Image

மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகக் கட்டுபாட்டின் கீழ் செயல்படும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுதிறனாளிகளுக்கு பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, மறுவாழ்வளித்தல் மற்றும் இதர செயல்பாட்டினை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மீது குற்றச் செயல் ஏதும் இல்லை என காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்று அதன் அசலினை தங்கள் நிறுவனத்திலும் மற்றும் அதன் நகலினை தங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல் அலுவலரிடம் ஒப்படைக்கவும், தகுந்த சான்றிதழ்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சரிப்பார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்