கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை..!
ஆந்திராவில் விஜய் என்பவர் குடும்ப தகராறு காரணமாக பூச்சி மருந்தை குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் லட்சுமி புறம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் குடும்ப தகராறு காரணமாக பூச்சி மருந்தை குடித்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த விஜய் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.