அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் – 22 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 4.9 அளவிலான அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதன்படி,பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து,மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்.இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்ததாக மாகாண கலாச்சாரம் மற்றும் தகவல் துறையின் தலைவர் பாஸ் முகமது சர்வாரி தெரிவித்துள்ளார். இதன்காரணமாக,இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற கூறப்படுகிறது.