பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!
எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு புரட்சித்தலைவர் “பாரத ரத்னா” எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ”ஒரு செயலை செய்து முடிக்க எண்ணுபவர், மிக உறுதியுடன் இருந்தால் அவர் நினைத்தபடியே அந்தச் செயலைச் செய்து முடிப்பார்’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க இந்தியத் திருநாட்டின் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக ஆக்க சுயவேலை வாய்ப்புத் திட்டமான ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தினை உருவாக்கி, வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதோடு அவற்றை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 16-ஆம் தேதி ‘தேசிய ஸ்டார்ட்-அப் தினம்’ கொண்டாடப்படும் என்ற அறிவிப்பினை திருவள்ளுவர் தினத்தன்று அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், சுயதொழில்கள் மேலும் வளர்ந்து, நாடு மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்ல எனது நல்வாழ்த்துக்கள்.’ என தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு புரட்சித்தலைவர் “பாரத ரத்னா” #MGR அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து அவரின் அரசியல் ஆளுமையையும், திரையுலக பெருந்திறனையும் போற்றியுள்ள மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/9KfWW3xvFa
— O Panneerselvam (@OfficeOfOPS) January 17, 2022