#BREAKING பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்..! எப்போது தெரியுமா…?
பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பிப்.20-ஆம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. பிப்.20-ஆம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குரு ரவி தாஸ் ஜெயந்தியையொட்டி, அரசியல் கட்சியினர் தேர்தல் தேதியை மாற்றுமாறு கோரிக்கை வைத்த நிலையில், தேர்தல் ஆணையம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதியை மாற்றி வைத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மார்ச் 10-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.