கொரோனா எதிரொலி…இவர்களுக்கும் தேர்வு ஒத்திவைப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரி:கொரோனா பரவல் எதிரொலியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த நிலையில்,அவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.
மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில்,கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தை தொடர்ந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப் படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.வரும் ஜனவரி 19 ஆம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெறவிருந்த நிலையில்,அவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“கொரானா பெருந்தொற்று காரணமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு 1 தமிழக அரசைப் பின்பற்றி ஒத்திவைக்கப்படுகிறது.தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளது.