திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர்…!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இன்று திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் திருவள்ளுவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.