குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த் – வைரல் புகைப்படம் உள்ளே ….!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் இன்று பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்று இல்லாத ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும் என வாழ்த்தியுள்ளார். மேலும் தனது குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,
குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களுடன், தைத்திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடியபோது எடுத்த படங்கள்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.#HappyPongal | #பொங்கல்நல்வாழ்த்துக்கள் pic.twitter.com/zf4DHNqMFP
— Vijayakant (@iVijayakant) January 14, 2022