#Breaking:உச்சகட்டம்…2 லட்சத்தை நெருங்கிய கொரோனா;4,868 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 442 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,60,70,510 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 24,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,60,70,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 442 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,84,655 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 60405 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,46,30,536 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 8,21,446 ஆக இருந்த நிலையில்,தற்போது 9,55,319 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,53,80,08,200 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 85,26,240 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பாதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக உயர்ந்துள்ளது.அதில் 1,805 பேர் குணமடைந்துள்ளனர்.