மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி வரலாற்று சாதனை படைத்த மருத்துவர்கள்..! எந்த நாட்டில் தெரியுமா…?

அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாகவே மனிதர்களின் உறுப்பு செயலிழக்கும் போது, அந்த உறுப்பை மாற்ற வேண்டுமெனில் மீண்டும் மனிதர்களின் ஒருஉறுப்பை தான் பொருத்துவது உண்டு. அதற்கு மாறாக அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபரின் உயிரை காப்பாற்ற மாற்று இருதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு மருத்துவ காரணங்களால் மனித இதயம் பொருத்துவதற்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர்.
கடந்த புத்தாண்டையொட்டி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பன்றியின் இதயத்தை பொருத்த அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயத்தை பொருத்தி உள்ளனர். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டேவிட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பன்றியின் உறுப்புகளை மனித உடல் ஏற்றுக் கொள்ளாமல் போவதற்கு காரணமாக இருக்கக்கூடிய மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025