#Breaking:பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு – குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Default Image

டெல்லி:பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம்  செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார்.

உள்துறை அமைச்சகம் கூறியது:

அப்போது,பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் நின்றதாகவும்,முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கடும் விமர்சனம்:

இதற்கிடையில்,உடனடியாக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச்சென்றார்.விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன்.உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பதிண்டா விமான நிலையத்தில் இருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகினது.இவ்வாறு,பிரதமர் சென்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து பஞ்சாப் அரசு மீது பாஜகவினர் கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

உயர்மட்ட குழு:

இதற்கிடையில்,பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் எந்த குறைபடும் இல்லை என்றும்,இது அரசியல் நோக்கமாக பார்க்க வேண்டிய விசயமாக தெரிகிறது என்றும் பஞ்சாப் அரசு கூறியுள்ளது.இதனைத் தொடர்ந்து, பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்தது பஞ்சாப் அரசு அமைத்தது.

பஞ்சாப்,ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு போடப்பட்ட ஆணை:

இதனையடுத்து,பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்காநீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்த ஆவணங்களை திரட்டி, பாதுகாக்க வேண்டும் என்று பஞ்சாப்,ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு:

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில்,பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு மிகவும் முக்கிய விசயமாக பார்ப்பதாகவும் கூறி,இது தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அந்த விசாரணைக் குழுவில் டிஜிபி சண்டிகர்,தேசிய புலனாய்வு முகமை ஐஜி,பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல், பஞ்சாப் ஏடிஜிபி (பாதுகாப்பு) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து,இந்த விசாரணைக் குழு எவ்வளவு விரைவாக விசாரித்து ஆவணங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறதோ,அதனடிப்படியில் அடுத்த கட்ட விசாரணையை உடனடியாக தொடங்ப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.இதனையடுத்து,வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்