“ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயமாக நடைபெறும்” – அமைச்சர் பி.மூர்த்தி அளித்த உறுதி!
மதுரை:கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன், ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் அனுமதித்துள்ளார் என்றும்,அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்றும் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக,மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது:
“ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.அதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் இன்று அறிவிப்பார்.அவர் அறிவித்தவுடன் போர்க்கால அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும்”,என்று தெரிவித்துள்ளார்.