20 சதவீத விமானங்கள் ரத்து- இண்டிகோ அறிவிப்பு..!
20 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 20 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி வரை பயணிகளிடம் இருந்து வேறு தேதிக்கு பயணத்தை மாற்றக் கட்டணத்தையும் வசூலிக்க மாட்டோம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. ஒரு பயணி ஒரு விமானத்திற்குப் பதிலாக வேறு தேதிக்கு விமானத்தில் செல்லும்போது, அவர் மாற்றக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் இந்த கட்டணத்தை மார்ச் 31 வரை தள்ளுபடி செய்துள்ளது.