லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நெற்றியில் இப்படி குங்குமம் வைக்க வேண்டும்..!

Default Image

லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நெற்றியில் எப்படி குங்குமம் வைக்க வேண்டும் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலரை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட தோன்றும். ஒரு சிலரை பார்க்காமல் செல்ல வேண்டும் என்று தோன்றும். இதற்கு காரணம் ஒரு சிலரிடம் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும் அதனால் அவர்களை பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு நிறைவு கிடைக்கும். முக்கியமாக மனதின் பிரதிபலிப்பே முகத்தில் தெரியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அதுபோல தான் மனம்  தெளிவாகவும், நல்லதை நினைக்க கூடியவர்களாகவும், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் அவர்களிடம் தானாகவே தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும்.

மனதில் பொறாமை எண்ணத்தோடு மற்றவர்களை கண்டால் வயிற்றெரிச்சல் படுபவர்களுடைய முகத்தை பார்த்த உடனே கண்டு பிடித்து விடலாம். இவர்களுடைய மனதில் அழுக்கு இருக்கும். இவர்களை யாரும் பெரிதாக பார்க்க விரும்ப மாட்டார்கள். ஒரு சிலர் நல்லதை நினைத்தாலும் 4 பேர் இருக்கும் இடத்தில் மரியாதை கிடைக்காமல் இருப்பார்கள். அதனால் உங்களது மனம் தெளிவு பெறவும், நீங்கள் தெய்வ கடாட்சத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தொட்டாசிணுங்கி இலைக்கு மிகவும் பொலிவு படுத்தக்கூடிய சக்தி உள்ளது.

அதனால் அதில் சிறிது இலைகள் நன்மைக்காக என்று கூறி பறித்துக்கொள்ளுங்கள். அதனை உலரவைத்து பொடி செய்து உங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய குங்குமத்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து கொள்வதன் மூலம் உங்களை பிடித்த கெட்ட எண்ணங்கள் மறைந்து முகம் லட்சுமி கடாட்சம் அடையும். குங்குமம் வைத்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள் குங்குமத்தை சிறிது உச்சந்தலையில் வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் முகம் பொலிவு பெரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்