#BREAKING: கொரோனா பாதிப்பு – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் இன்று 4.30 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 327ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டிய நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே, கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025