#BREAKING : அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்பு..!

Default Image

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது. 

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் அவர்கள், ‘நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்பதால் வெளிநடப்பு செய்தேன். சமூக நீதிக்கு எதிராக நீட் இல்லை. இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதாக கூறுவதும் உண்மைக்குப் புறம்பானது. நீட் தேர்வால்  கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு பாதிக்கப்படவில்லை என்றும், நீட் தேர்வால் எள் முனையளவு கூட பாதிப்பு இல்லை, நீட் தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பல மணிலா மாணவர்கள் பயனடைந்து வருகின்ற்னர் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
M K Stalin
chicken pox (1)
orange alert tn
CSK Squad
Red Alert TN
Fengal Cyclone