இன்று முதல்…பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இவை செயல்படும்-வியாபாரிகள் சங்கம்..!
சென்னை:கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும்,தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி மார்க்கெட் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வர வேண்டும் என்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்,ஜனவரி 9-ம் தேதி(நாளை) முழு முடக்கத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.