#Breaking:அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து – இன்று மசோதா தாக்கல்!

Default Image

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டட கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.அதன்படி, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் 2023 ஆண்டு வரை உள்ள நிலையில்,அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் நகைக்கடன் வழங்கப்பட்டதில்,கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்கள் மூலம் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில்,தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வான நிலையில்,இந்த தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்