#BREAKING: ராஜஸ்தான் முதல்வர் கொரோனாவால் பாதிப்பு..!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டரில் கூறியதாவது, இன்று மாலை எனக்கு நானே கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் பாசிட்டிவ் வந்துள்ளது.எனது அறிகுறிகள் லேசானவை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இன்று என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
This evening I got myself tested for Covid and was found positive. My symptoms are very light and there is no other problem. All those who came into contact with me today, I request them to isolate themselves and undergo Covid-Test.
— Ashok Gehlot (@ashokgehlot51) January 6, 2022