தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Default Image

தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பசுமை எரிசக்தி திட்டம் இரண்டாம் கட்டத்தில் தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையிலான பசுமை மின் வழித்தட 2-ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.12,031 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தின் மூலம் தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சுமார் 20 ஜிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030க்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

திட்டத்தில் 7 மாநிலங்களுக்கு மத்திய அரசின் பங்காக, ரூ.3,970.34 கோடி பகிர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கடா பசுமை எரிசக்தி திட்டத்தை 5 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்