சூரத்தில் விஷவாயு கசிவால் 6 பேர் பலி – இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி

சூரத்தில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி எம்.பி ட்வீட்.
குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் அங்கு பணிபுரிந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, வாயு கசிவால் உடல்நலகுறைவு ஏற்பட்ட 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூரத்தில் விஷவாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய விசாரணை நடத்த வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
सूरत में हुए गैस लीक हादसे से जिनके प्रियजनों की जान गयीं, उन्हें शोक संवेदनाएँ।
अन्य पीड़ितों के जल्द ठीक होने की कामना करता हूँ।
भविष्य में ऐसे हादसे रोकने के लिए सही जाँच होनी चाहिए। pic.twitter.com/6Ou3EWJXi4— Rahul Gandhi (@RahulGandhi) January 6, 2022